பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
அம்பை:
கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியர் பொறுப்பு ஸ்ரீராம் ராஜா தலைமையில் நடந்தது. சேரன்மாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பள்ளி மேலாண்மை குழு தலைவராக வனிதா, துணைத்தலைவராக சங்கீதா, உறுப்பினர்களாக கல்லிடைக்குறிச்சி நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் இசக்கி பாண்டியன், கவுன்சிலர் மாரிராஜ், முன்னாள் கவுன்சிலர் சேக் மைதீன் உள்ளிட்ட 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆசிரியர் அழகு திருமலை வேல் நம்பி நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆசிரியர் ஐசக் வெற்றிச்செல்வம் தொகுத்து வழங்கினார்.