பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
திருமருகல், தகட்டூர், தேத்தாகுடியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளியின் தலைமையாசிரியர் நிர்மலாராணி தலைமை தாங்கினார்.துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக செந்தமிழ்ச்செல்வி சுரேஷ், துணைத் தலைவராக மதியழகன் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.திருமருகல் ஒன்றியத்தில் 6 மேல்நிலைப்பள்ளிகள், 7 உயர்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இதேபோல தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் தனக்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர் விஸ்வநாதன் வரவேற்றார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோகிலதாஸ், நாகலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேலாண்மைக்குழு தலைவராக ஜெயா வீரமணி, துணை தலைவராக சுஜாதா மற்றும் மேலண்மைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி தெற்கு எஸ்.கே.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த மேலாண்மைக்குழு கூட்டத்துக்கு தலைமையாசிரியர் தொல்காப்பியன் தலைமை தாங்கினார். ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், ஊராட்சி மன்றதலைவர் வனஜா சண்முகம், துணை தலைவர் அழகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக நிலவரசி, துணை தலைவராக கவிதா மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யபட்டனர்.