கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1¼ கோடி ஒதுக்கீடு-மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் ஒப்புதல்

Update: 2022-11-15 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி செயலாளர் மாரிமுத்து ராஜ் வரவேற்று பேசினார். துணைத் தலைவர் சரஸ்வதி முருகசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் காவேரி, குட்டி, செல்வராஜ், மாது, சரவணன், குமார், தனபால், கந்தசாமி ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தர்மபுரி மாவட்டத்தில் கிராம புறங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளை சீரமைக்கும் பணி, பள்ளி கட்டிடம் பழுது நீக்கம் செய்யும் பணி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள் பராமரிப்பு பணிக்கு ரூ.1.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகளை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்