சிறுமியை கடத்தி கர்ப்பமாக்கிய டிரைவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியை கடத்தி சென்று கர்ப்பமாக்கிய டிரைவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2023-08-29 21:16 GMT

தஞ்சாவூர்;

சிறுமியை கடத்தி சென்று கர்ப்பமாக்கிய டிரைவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

16 வயது சிறுமி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள கோட்டை சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் விஜய் என்ற குட்டி விஜய்(வயது 24). டிரைவர்.கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பட்டுக்கோட்டையை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார்.

மாயம்

இந்த நிலையில் கொரோனா காலக்கட்டத்தின் போது பள்ளிகள் செயல்படாததால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரை காணவில்லை.இதையடுத்து சிறுமியின் தந்தை தனது மகளை காணவில்லை என பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.இந்த நிலையில் சிறுமியை விஜய் அழைத்துச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், சிறுமியை அழைத்து விசாரித்தபோது அவரை ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று விஜய் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.இதன் விளைவாக சிறுமி கர்ப்பம் அடைந்தார். பின்னர் சிறுமியின் கர்ப்பம் கலைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு இன்ஸ்பெக்டர் கன்னிகா போக்சோ சட்டத்தின் கீழ், விஜய்யை கைது செய்து விசாரணை நடத்தினார்.

25 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு தஞ்சை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. விஜய்க்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு கூறினார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்