பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்
பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம் அருகே குரூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). கொத்தனரான இவர் தற்போது கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவியை ஆசை வார்த்தை கூறியும், கட்டாயப்படுத்தியும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதையறிந்த அந்த மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.