அம்பை:
அம்பை வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவி விகாஷினி ரூபிக்ஸ் கியூப் என்னும் புதிர் விளையாட்டை திருக்குறள் ஒப்புவித்து கொண்டே குறைந்த நேரத்தில் முடித்து உலக சாதனை படைத்துள்ளார். மாணவி விகாஷினி 25 ரூபிக்ஸ் புதிரை 10 நிமிடங்களில் 2-க்கு 2 என்ற முறையில் முடித்ததோடு மட்டும் அல்லாமல் அந்த நேரத்தில் 120 திருக்குறளை ஒப்புவித்து லிங்கன் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
சாதனை படைத்த மாணவியை பள்ளி தாளாளர் வீரவேல் முருகன், இயக்குனர் ராஜராஜேஸ்வரி, முதல்வர் சக்திவேல் முருகன், முதல்வர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.