தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை

கந்தர்வகோட்டையில் தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-01 18:07 GMT

மாணவி தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை கோவிலூர் கீழத்தெருவை சேர்ந்தவர் அடைக்கலம். இவரது மகள் ஹர்ஷினி (வயது 14). இவர் கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை ஹர்ஷினி அதிக நேரம் தூங்கிக் கொண்டிருந்ததால் அவரது அண்ணன் ராஜசேகர் அவரை கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹர்ஷினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வழக்கு

இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாணவியின் தாய் ரேவதி கொடுத்த புகாரின் பேரில், கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்