தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை
தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் குருஜெயந்தி (வயது 16). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவர் திடீரென தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மாணவி எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.