ெபாள்ளாச்சியில் பள்ளி கல்வித்துறை அலுவலர் சங்க கூட்டம்
ெபாள்ளாச்சியில் பள்ளி கல்வித்துறை அலுவலர் சங்க கூட்டம்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி கல்வி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. இதற்கு, மாவட்ட தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ் வரவேற்றார். பொருளாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். கோவை வருவாய் மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் குடும்ப விழா நடத்துவது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட ஆலோசகர் குணசேகரன் நிர்வாகிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில், முன்னணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், உயர்மட்ட குழு உறுப்பினர் அடைக்கலம் நன்றி கூறினாா்.