பள்ளி நூற்றாண்டு விழா

அம்பை அருகே பள்ளி நூற்றாண்டு விழா நடைபெற்றது.

Update: 2023-05-22 19:05 GMT

அம்பை:

அம்பை அருகே வெள்ளாங்குழி விவேகானந்தர் தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அம்பை யூனியன் தலைவர் பரணி சேகர் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் முருகன், பள்ளி நிர்வாகி ராஜகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி அதிகாரி பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார்.

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான இரா.ஆவுடையப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி நூற்றாண்டு விழா மலரை வெளியிட, அதனை தலைமை ஆசிரியை வசந்தா பெற்றுக் கொண்டார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தி.மு.க. தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் வேல்துரை நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்