பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
ஜெயங்கொண்டம்:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதியிலும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. இந்த கணக்கெடுப்பு பணியை சின்னவளையம் கிராமத்தில் இருந்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த பணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள், தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும், அங்கன்வாடி பணியாளர்களும் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர். இப்பணியானது வருகிற ஜனவரி மாதம் 11-ந் தேதி வரை தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் உள்ள பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது.