பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் குழு ஆலோசனை கூட்டம்

அணைக்கட்டு வட்டாரத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-16 17:49 GMT

அணைக்கட்டு வட்டாரத்தில் வறுமை காரணமாகவும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் பல்வேறு குழந்தைகள் பள்ளியில் படிக்க முடியாமல் வேலைக்கு சென்று விடுகின்றனர். அவ்வாறு பள்ளிக்கு செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கான கணக்கெடுக்கும் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி பள்ளி செல்லாகுழந்தைகளின் ஒருங்கிணைப்பாளர் ஜோதிபாஸ் வரவேற்றார்.

அப்போது ஒருங்கிணைப்பாளர் பேசுகையில், அணைக்கட்டு வட்டாரத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 813 பேர் உள்ளனர் அவர்கள் அனைவரையும் கள ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு வயது ஏற்ற வகுப்பில் மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும். மேலும் 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்டறிந்து ஆலோசனை வழங்கப்பட்டு மீண்டும் துணை தேர்வு எழுதுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டு மீண்டும் பள்ளியில் தொடர அவர்களுக்கு வழிவகை செய்யப்படும். . பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் குழுவில் பயிற்றுனர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் மகளிர் குழுக்கள் இணைந்து செயல்படுவார்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்