பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு சுற்றுலா

தேனியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு சுற்றுலாவை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.

Update: 2023-10-17 19:45 GMT

தேனி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், உலக சுற்றுலா தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் வட்டார பகுதிகளை சேர்ந்த 8 அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகள், 9 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகள் என 17 விடுதிகளை சேர்ந்த 180 மாணவ, மாணவிகள் 3 பஸ்களில் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு சுற்றுலா பயணத்தை கலெக்டர் ஷஜீவனா நேற்று காலை தொடங்கி வைத்தார். 20 பாதுகாவலர்களுடன் ஆண்டிப்பட்டி அரசு அருங்காட்சியகம், வைகை அணை மற்றும் வைகை அணை பூங்கா பகுதிக்கு மாணவ, மாணவிகள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சுற்றுலா வளர்ச்சி குறித்தும், சுற்றுலா இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) பாஸ்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்