பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா நடந்தது.;

Update: 2023-04-28 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் முத்துசாமியாபுரம் லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேசன் பள்ளியில் 2022-2023ம் கல்வி ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகசுந்தரம், பள்ளியின் பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பள்ளியின் முதல்வர் ராஜராஜேஸ்வரி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்காசி விளையாட்டுத்துறை அலுவலர் வினு கலந்து கொண்டு பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விளையாட்டுப்போட்டிகள் குறித்த முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினார். விழாவில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்