பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்க பொதுச்செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பால்ராஜ், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் வெங்கடேசன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சாம் மாணிக்கராஜ் உள்ளிட்டவர்கள் கண்டன உரையாற்றினர்.
பணிப்பாதுகாப்பு சட்டம்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும், ஆசிரியர் பணிப்பாதுகாப்பு தனிச்சட்டம் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் இயற்றக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மோதிலால் ராஜ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் காளிராஜன் நன்றி கூறினார். இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.