பரமத்திவேலூர்:
கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து பெஞ்ச், டெஸ்குகள் உள்ளிட்ட நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை மெஹருன்னிசா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தங்கமணி, பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு டெஸ்க் மற்றும் பெஞ்சுகளை தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி, நாமக்கல் ஆவின் சேர்மன் ராஜேந்திரன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.