பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கப்பு
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டனர்.
திருவாடானை தாலுகாவில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் உள்ள பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நேற்று முதல் தொடங்கப்பட்டது. இந்த கணக்கடுப்பு பணியில் வட்டார கல்வி அலுவலர்கள் புல்லாணி, வசந்த பாரதி, வட்டார வளமைய மேற்பார்வை யாளர் கார்த்திக், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். வருகிற ஜனவரி மாதம் 12-ந் தேதி வரை இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.