மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

பாளையங்கோட்டையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

Update: 2022-06-26 18:02 GMT

பாளையங்கோட்டையில் நாயுடு சமுதாய சங்கம் சார்பில், நலிவுற்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. நாயுடு சமுதாய அறக்கட்டளை பொருளாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற தபால்காரர் கிருஷ்ணன், சங்க பாளையங்கோட்டை செயலாளர் வெங்கட்ராமன், துணைத்தலைவர் மூர்த்தி நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மரிய சூசை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கினார். மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, நிர்வாகிகள் கோவிந்தராஜூ, நல்லையா, அந்தோணி, முத்துலட்சுமி, சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்