சிதம்பரம்நடராஜர் கோவிலில் செங்கோல் வழிபாடு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் செங்கோல் வழிபாடு நடந்தது.
சிதம்பரம்,
புதுடெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. இதையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொதுதீட்சிதர்கள் சார்பில் செங்கோல் வழிபாடு நடந்தது. இதில் ஓதுவார் தேவாரம் பாடி செங்கோலுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அவர்கள், இந்தியாவில் தர்மத்தின் ஆட்சியான செங்கோல் ஆட்சி நிலைக்கட்டும் என உறுதிமொழி ஏற்றனர். பின்னர் அந்த செங்கோல் நடராஜர் சன்னதி அருகில் உள்ள அறையில் வைக்கப்பட்டது.