நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் - பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிசாமி கடிதம்

பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2023-05-27 14:10 GMT

சென்னை, 

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். டெல்லியில் நாளை உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ,

நமது சுதந்திரத்தின் 75 வது ஆண்டை நினைவுகூரும் வகையில் "ஜனநாயகத்தின் சின்னம்" என்ற புதிய நாடளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தமிழர் பெருமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை விளக்கும் வகையில், சபாநாயகர் இருக்கைக்கு அருகே வரலாற்று சிறப்புமிக்க 'செங்கோல்' நிறுவப்பட்டதற்கு தமிழக மக்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . 

Tags:    

மேலும் செய்திகள்