வேலாயுதம்பாளையம்-குளித்தலை பகுதிகளில் சாரல் மழை

வேலாயுதம்பாளையம்-குளித்தலை பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

Update: 2023-01-30 18:30 GMT

வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியத்திற்கு மேல் வேலாயுதம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல குளித்தலை பகுதியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் இல்லாத நிலையில் பிற்பகல் லேசான சாரல் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு அவ்வப்போது விட்டு விட்டு லேசான சார மழை பெய்து கொண்டே இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்