தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். அதன்படி கரூரில் நேற்று காலை முதலே வெயில் இல்லாமல் மேகமூட்டமாகவே காட்சியளித்தது. இதனால் பகல் நேரங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணியளவில் சாரல் மழை பெய்தது.