கரூரில் காலை முதல் வெயில் அடித்தது. இந்நிலையில் இரவு சுமார் 8.30 மணியளவில் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 30 நிமிடங்கள் பெய்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். இந்த மழையால் கரூரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கரூர் மாவட்டத்தில் காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- கரூர்-11.2, அரவக்குறிச்சி-2, அணைப்பாளையம்-10.2, க.பரமத்தி-6.4, குளித்தலை-16, தோகைமலை-2.3, கிருஷ்ணராயபுரம்-45, மாயனூர்-50, பஞ்சப்பட்டி-47.4, கடவூர்-12.6, மைலம்பட்டி-23. மொத்தம்-226.10.