வனப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு:சுருளியாறு மின்நிலைய பகுதிக்கு இடம்பெயர்ந்த காட்டுயானைகள்

வனப்பகுதியில் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாடு காரணமாக சுருளியாறு மின்நிலைய பகுதிக்கு காட்டுயானைகள் இடம்பெயர்ந்தன.

Update: 2023-08-14 18:45 GMT

கூடலூர் அருகே வண்ணாத்தி பாறை மங்களதேவி பீட், மாவடி, வட்டத்தொட்டி, பளியன்குடி ஆகிய வனப்பகுதிகள் உள்ளன. இங்கு அரிய வகை மரங்கள், மான், யானை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்கள் உள்ளன. தற்போது இந்த வனப்பகுதியில் உள்ள குட்டைகள் வறண்டு காணப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக தண்ணீரை தேடி யானைகள் மலையடிவாரத்தை ஒட்டிய பளியன்குடி, நாயக்கர் தொழு, வெட்டுக்காடு, எள்கரடு ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக 3-க்கும் மேற்பட்ட யானைகள் குடிநீரைத் தேடி சுருளியாறு மின் நிலையம் குடியிருப்பு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் மின் உற்பத்தி ஊழியர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. எனவே குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்