ஆண் குழந்தைகள் அதிகம் பிறக்கும் பகுதியில் ஸ்கேன் மையங்களை கண்காணிக்க வேண்டும்

ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள ஸ்கேன் மையங்களை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா அறிவுறுத்தினார்.

Update: 2023-02-01 13:57 GMT

ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள ஸ்கேன் மையங்களை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா அறிவுறுத்தினார்.

ஆய்வுக்கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசியதாவது:-

நமது மாவட்டத்தில் 987 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெறுகின்ற மாதாந்திர மேலாண்மை குழு கூட்டத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதன் அவசியம் குறித்து அறிவுறுத்தப்பட வேண்டும். விழிப்புணர்வு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வது குறித்து பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், பள்ளியில் பயின்று நின்றுள்ள குழந்தைகளை கண்டறிந்து இடைநிற்றலை தடுக்க வேண்டும்.

குறைந்தபட்சம் அனைவரும் 12-ம் வகுப்பு வரை பயின்றிருக்க வேண்டும். பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிக ஆண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகமுள்ள பகுதியை ஆய்வு செய்து, அங்குள்ள ஸ்கேன் மையங்களில் குழந்தையின் பாலினம் அறியப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உறுதிமொழி

அதைத்தொடர்ந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் மாரிமுத்து, சுகாதாரப்பணிகளின் துணை இயக்குநர் செந்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன் மற்றும் சமூக நலத்துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்