துணிவு, வாரிசு படங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறிஉசிலம்பட்டியில் ரசிகர்கள் மறியல்

துணிவு, வாரிசு படங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி உசிலம்பட்டியில் ரசிகர்கள் மறியல் ஈடுபட்டனர்

Update: 2023-01-10 20:34 GMT

உசிலம்பட்டி, 

அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாக உள்ளன. நள்ளிரவு 1 மணி மற்றும் அதிகாலை 5 மணிக்கு வெளியாகும் இந்த இரு திரைப்படங்களையும் காண தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் துணிவு திரைப்படமும், மற்றொரு தியேட்டரில் வாரிசு திரைப்படமும் வெளியாகிறது. இங்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தில் டிக்கெட் விற்கப்படுவதாக கூறி ரசிகர்கள் மதுரை-தேனி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு தியேட்டர் வாரியாக ஆய்வு செய்து அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்