ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறிரூ.2½ கோடி மோசடி செய்த மெடிக்கல் ஏஜெண்டு கைது
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2½ கோடி மோசடி செய்த மெடிக்கல் ஏஜெண்டு கைது செய்யப்பட்டார்.
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2½ கோடி மோசடி செய்த மெடிக்கல் ஏஜெண்டு கைது செய்யப்பட்டார்.
ரூ.2½ கோடி
கோபி பச்சைமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டவர். இவருடைய மகள் கஸ்தூரி தேவி (வயது 41). இவருக்கு, திருப்பூர் ராயபுரம் எல்.ஆர்.ஜி. லே அவுட் பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (45) என்பவர் அறிமுகமானார். அவர் கஸ்தூரி தேவியிடம், தன்னை ரெயில்வே மண்டல பயணிகள் கமிட்டி உறுப்பினர் என்றும், ரெயில்வேயில் என்ஜினீயர், உதவி ஸ்டேஷன் மாஸ்டர், புக்கிங் கிளார்க் உள்ளிட்ட பணிகளை வாங்கி தருவதாகவும், பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் இருந்தால் தன்னிடம் தெரிவிக்குமாறும் கூறியுள்ளார்.
இதனை நம்பி, கஸ்தூரி தேவி அவருக்கு தெரிந்தவர்களிடம் ரெயில்வே வேலைக்காக பணம் பெற்று, கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை முதல் நவநீதகிருஷ்ணன் வங்கி கணக்கிற்கும், கையில் ரொக்கமாகவும் இதுவரை ரூ.2 கோடியே 50 லட்சம் வரை அளித்துள்ளார். ஆனால் இதுவரை யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை. இதனால், கஸ்தூரி தேவி தொடர்ந்து நவநீதகிருஷ்ணனிடம் வேலை வாங்கி தரவில்லை என்றால் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.
மெடிக்கல் ஏஜெண்டு கைது
இதனால் நவநீதகிருஷ்ணன் அவரது செல்போனை சுவிட்ச் அப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் நவநீதகிருஷ்ணன் மோசடி செய்ததை உணர்ந்த கஸ்தூரி தேவி இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மனுவை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில், மெடிக்கல் ஏஜெண்டான நவநீதகிருஷ்ணன் திருப்பூரில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், திருப்பூர் விரைந்து சென்று, நவநீதகிருஷ்ணனை நேற்று முன்தினம் கைது செய்து, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.