சாயல்குடி,
சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுக்கான கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். முடிவில் அலுவலக பணியாளர் கரிமுல்லா நன்றி கூறினார்.