ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி ஊா்வலம்

ஓ.என்.ஜி.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி திருவாரூரில் தொழிலாளர்-விவசாயிகள் சங்கங்கள் சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-08-23 18:02 GMT


ஓ.என்.ஜி.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி திருவாரூரில் தொழிலாளர்-விவசாயிகள் சங்கங்கள் சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒப்பந்த தொழிலாளர்கள்

ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுக்கப்பட்டுள்ள ஓ.என்.ஜி.சி. துரப்பன பணிகளை உடனே தொடங்க அனுமதி வழங்க வேண்டும். 40 ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சியை நம்பி ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வரும் தொழிலாளர்களின் குடும்பங்களை பாதுகாக்க வேண்டும். 10 ஆயிரம் ஓப்பந்த தொழிலாளர்களின் பணிக்கு உத்திரவாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்-விவசாயிகள் சங்கங்கள் சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

முன்னதாக நேற்று திருவாரூர் புதிய பஸ்நிலையத்திலிருந்து தொழிலாளர்- விவசாயிகள் சங்கங்கள் சார்பில் ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு நாகை செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, நாகை மாலி எம்.எல்.ஏ. விவசாயிகள் நல சங்க மாநில தலைவர் சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் பில்லா, செயலாளர் சுரேஷ், சி.ஐ.டி.யூ. ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் கருணாநிதி, செயலாளர் ராஜேஸ்வரன், அ.ம.மு.க. ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்