சவரத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

தூத்துக்குடியில் சவரத்தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2022-08-11 13:23 GMT

தூத்துக்குடி சவரத் தொழிலாளர் சங்க 42-வது ஆண்டு விழா, முன்னாள் தலைவர் உருவப்படம் திறப்பு விழா மற்றும் சங்க நிர்வாகிகள் தேர்தல் சங்க அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகர தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் பெருமாள் உருவப்படத்தை மாவட்ட தலைவர் சண்முகவேல், மாநகர தலைவர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவராக வி.சுப்பிரமணியன், செயலாளராக கே.முத்தரசு, பொருளாளராக என்.பாலசரவணவேல், துணைத்தலைவராக டி.பண்டார பலவேசமுத்து, துணை செயலாளராக ஏ.நாராயணன், ஆலோசகராக கே.சண்முகவேல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளர் முத்தரசு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்