சவுபாக்கிய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சவுபாக்கிய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-05-24 18:45 GMT

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் மதனகோபாலசுவாமி கோவில் திருமேனிகள் பாதுகாப்பகம் அருகே அமைந்துள்ள சவுபாக்கிய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 22-ந்தேதி காலை கலசபூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி பூஜைகளும், அன்று மாலை அங்குராப்பணம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜைகளும் நடந்தன. நேற்று முன்தினம் காலையில் 2-வது கால யாகசாலை பூஜைகளும், மாலையில் 3-வது கால யாகசாலை பூஜைகளும் நடந்தன. நேற்று காலை 4-வது கால யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், கடம்புறப்பாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து செல்லப்பா அய்யர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள், சவுபாக்கிய விநாயகர், பாலமுருகன், ஆஞ்சநேயர், மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதிகளின் கும்பங்களுக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் சாமியப்பா நகர், உழவர் சந்தை பகுதி, ரெங்கா நகர், குறிஞ்சி நகர், வடக்கு மாதவி சாலையில் அமைந்துள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று இரவு சுவாமி வீதியுலா நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்