காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்
மத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் செல்லகுமார் எம்.பி. பங்கேற்றார்.
மத்தூர்
மத்தூர் பஸ் நிலையத்தில் ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வட்டார காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மத்தூர் வட்டார தலைவர் மாது வரவேற்றார். போச்சம்பள்ளி வட்டார தலைவர் மிண்டிகிரி ரவி, கல்லாவி ரவிச்சந்திரன், பர்கூர் நகர தலைவர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செல்லகுமார் எம்.பி. கலந்து கொண்டு சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட துணை தலைவர் சேகர், மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.