ராகுல் காந்தி பதவி பறிப்பு எதிரொலி - தமிழக காங்கிரஸ் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.;

Update:2023-03-25 20:11 IST

சென்னை,

மோடி பெயரை பயன்படுத்தி அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரை மக்களவையில் இருந்து தகுதிநீக்கம் செய்வதாக மக்களவை செயலகம் நேற்று அறிவித்தது.

இது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், காங்கிரஸ் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து சத்தியாகிரக போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட தலைநகரங்களில் மகாத்மா காந்தி சிலை முன்பு ஒரு நாள் சத்தியாகிரக அறப்போராட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்து உள்ளார். 

 

 

Tags:    

மேலும் செய்திகள்