காங்கிரஸ் சார்பில் சத்யாகிரக அறப்போராட்டம்
ஆம்பூர் நகர காங்கிரஸ் சார்பில் சத்யாகிரக அறப்போராட்டம் நடைபெற்றது.
ஆம்பூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி சத்தியாகிரக அறப்போராட்டம் ஆம்பூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. நகர தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் கொத்தூர் மகேஷ், மாவட்ட துணைத் தலைவர் வர்தா அர்ஷத் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஷமியுல்லா, விஜயன், ராஜசேகர், கோபி, மின்னூர் சங்கர், ரமேஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.