சத்யா கொடூர கொலை...! தண்டிக்கணும். எந்த தலைவனா இருந்தாலும் சரி, சினிமாவா இருந்தாலும் சரி...! வயிறெரியுது- கஸ்தூரி கோபம்

சமூக பிரச்சனைகள் குறித்து குரல் கொடுத்து வரும் நடிகை கஸ்தூரி சத்யா கொலை குறித்து கோபமாக டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்;

Update: 2022-10-15 07:33 GMT

சென்னை

சென்னையை அடுத்த ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த மாணிக்கம்-ராமலட்சுமி தம்பதியின் மூத்த மகள் சத்யா (வயது 20). இவர், காதல் விவகாரத்தில் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணிக்கு பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயிலுக்குள் தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

மகிழ்ச்சியோடு கல்லூரி சென்ற மகள் ரெயிலுக்குள் தள்ளி கொலை செய்யப்பட்டு தலை துண்டான நிலையில் தண்டவாளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் கதறி துடித்தனர்.

சத்யாவின் தந்தை மாணிக்கம், மகளின் இழப்பை தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமூக பிரச்சனைகள் குறித்து குரல் கொடுத்து வரும் நடிகை கஸ்தூரி சத்யா கொலை குறித்து கோபமாக டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார் அவர் கூறி இருப்பதாவது:-

சென்னை சோகம்: சத்யாவின் கொடூரமான கொலையை கேள்விப்பட்ட அவரது அப்பா மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சத்யப்ரியாவின் தாய் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார், சதீஷின் தந்தை அதே காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தார். போலீசுக்கே இந்த கொடுமைனா என்னத்த சொல்லுறது.. என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் விருப்பமில்லாத பெண்ணை தொடர்ந்து தொந்தரவு பண்ணுறது விடாமுயற்சி, வீரம் புண்ணாக்குன்னு நம்புறவன மட்டுமில்ல, நம்ப வச்சவனையும் சேர்த்து தண்டிக்கணும். அது எந்த தலைவனா இருந்தாலும் சரி, சினிமாவா இருந்தாலும் சரி. வயிறெரியுது. சத்யா என குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்