தூத்துக்குடியில் சனிக்கிழமைமின் தடை ரத்து
தூத்துக்குடியில் சனிக்கிழமை திட்டமிட்டு இருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி நகர், ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின் தடை அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிர்வாக காரணங்களால், அந்த மின்தடை ரத்து செய்யப்படுகிறது. எனவே, தூத்துக்குடி நகர்ப்புறப் பகுதியில் நாளை வழக்கம்போல் மின் விநியோகம் வழங்கப்படும்.
இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் போ.ராம்குமார் தெரிவித்து உள்ளார்.