சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் சத்துணவு-அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்ணில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணி செய்த ஓய்வூதியர்களுக்கு மாதம் 6750 அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட அமைப்பாளர் கமலநாதன், துணைத்தலைவர் மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.