சத்தியநாதர் கோவில் கும்பாபிஷேகம்

சத்தியமங்கலத்தில் சத்தியநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-08-21 17:56 GMT

செஞ்சி, 

செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் சத்யாம்பிகை உடனுறை சத்தியநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாக சாலை பூஜை நடந்தது. பின்னர் மேள, தாளம் முழங்க யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகன், பைரவர் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்