சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி
சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது.;
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் வைகாசி திருவிழா வாஸ்து சாந்தி பூஜையுடன் 26-ந் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து 27-ந் தேதி கொடியேற்றத்துடன் யாக சாலை பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு மண்டகபடிதாரர்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து நேற்று சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி புஷ்ப ஊரணியில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.