சத்தியமங்கலத்தில்வெறிநாய்க்கடி தடுப்பு தின உறுதிமொழி ஏற்பு

சத்தியமங்கலத்தில் வெறிநாய்க்கடி தடுப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது

Update: 2023-09-28 21:14 GMT

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் வெறிநாய்க்கடி தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சத்தியமங்கலத்தில் உள்ள வீட்டில் வளர்க்கப்படும் செல்லபிராணிகளுக்கு குறிப்பாக நாய்களுக்கு சத்தியமங்கலம் கால்நடை மருத்துவமனையில் வெறிநாய்க்கடி தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. டாக்டர் கார்த்திகேயன் தடுப்பூசி போட்டார். மேலும் வெறிநாய்க்கடி தடுப்பு தினத்தை முன்னிட்டு தாய் சேய் நல விடுதியில் நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். இதில் நகராட்சி ஆணையாளர் குமார், துப்புரவு அலுவலர் சக்திவேல், 12-வது வார்டு கவுன்சிலர் கே.குர்ஷித், முன்னாள் தி.மு.க. செயலாளர் கே.ஆர்.சபியுல்லா, தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்