சத்தியமங்கலத்தில் அ.தி.மு.க. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2022-08-30 17:54 GMT

போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை கண்டித்து சத்தியமங்கலத்தில் கோவை ரோட்டில் அரசு போக்குவரத்து பணிமனை அருகே அரசு போக்குவரத்து கழக அ.தி.மு.க. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மண்டல செயலாளர் ஏ.ராமசாமி தலைமை தாங்கினார். அண்ணா தொழிற்சங்க செயலாளர் வி.தெய்வநாயகம் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., கே.வி.ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் பண்ணாரி, ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சத்தி ஒன்றிய செயலாளர் சிவராஜ், பவானிசாகர் ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் தேவராஜ், ஈரோடு மாவட்ட எம்.ஜி.ஆர.் மன்ற இணைச்செயலாளர் வாத்தியார் துரைசாமி, அரியப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் தேவமுத்து, சத்தியமங்கலம் தொழிலாளர் சங்க துணைச்செயலாளர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்