சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.980-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.980-க்கு ஏலம் போனது

Update: 2023-10-19 21:32 GMT

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று பூக்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.மல்லிகைப்பூ கிலோ ரூ.980-க்கும், முல்லை ரூ.425-க்கும், காக்கடா ரூ.450-க்கும், செண்டுமல்லி ரூ..81-க்கும், பட்டுப்பூ ரூ.44-க்கும், சாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், அரளி ரூ.270-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.160-க்கும் ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்