சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.580-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.580-க்கு ஏலம் போனது
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் பூக்கள் ஏலம் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். அதன்படி நேற்று பூக்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.580-க்கும், முல்லை ரூ.240-க்கும், காக்கடா ரூ.125-க்கும், செண்டுமல்லி ரூ.25-க்கும், பட்டுப்பூ ரூ.30-க்கும், சாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், அரளி ரூ.50-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.70-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும் ஏலம் போனது.