சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.507-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.507-க்கு ஏலம் போனது

Update: 2023-06-02 20:27 GMT

சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 6 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.507-க்கும், முல்லை ரூ.160-க்கும், காக்கடா ரூ.500-க்கும், செண்டுமல்லி ரூ.49-க்கும், பட்டுப்பூ ரூ.120-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.90-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் ேபானது. 

Tags:    

மேலும் செய்திகள்