சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-10 21:30 GMT

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத் தினர் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாவட்ட செயலாளர் வெங்கட சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டவா்கள் கூறும்போது, மாநிலம் முழுவதும் பிடித்தம் செய்யப்பட்ட ஜி.பி.எப்., எஸ்.பி.எப். தொடர்ந்து வழங்கப்படா மல் உள்ளது.

அதை விரைந்து வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,780-ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஈமச்சடங்கு முன்பணம் குறித்து அரசாணை வெளியிட வேண்டும் என்றனர்.

இதில் அரசு ஓய்வூதியர் சங்க பலராமன், அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் சாமிகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.


மேலும் செய்திகள்