சாத்தான்குளம் பஞ்சாயத்து யூனியன் கூட்டம்

சாத்தான்குளம் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் நடந்தது.

Update: 2022-11-10 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் பஞ்சாயத்து யூனியன் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு யூனியன் தலைவர் ஜெயபதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அப்பாத்துரை, ஆணையர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் வரவேற்றார். இளநிலை உதவியாளர் முருகேஸ்வரி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் புதுக்குளம் பஞ்சாயத்து குலசேகரன்குடியிருப்பில் தார் சாலை அமைப்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், ஜெயகார்த்திகைதீபம், உதவி பொறியாளர்கள் அருணா, கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்