சாத்தான்குளம் தேவி மகாமாரியம்மன் கோவில் கொடை விழா

சாத்தான்குளம் தேவி மகாமாரியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.;

Update:2023-07-12 00:15 IST

தட்டார்மடம்:

சாத்தான்குளம் வடக்கு தெரு தேவி மகா மாரியம்மன் ஆனி மாத கொடை விழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது.

கொடை விழா முதல் நாள் மாலையில் தேவி அழகப்பன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரண்டாம் நாள் காலை பெண்கள் முளைப்பாரி எடுத்து கும்மி அடித்து எடுத்து வந்த முளைப்பாரியை கரைத்தல், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு அலங்கார பூஜை, மதிய கொடை விழா, மதியம் 1 மணிக்கு அம்மன் கும்பம் வீதி உலாவருதல், மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 7 மணிக்கு அம்மன் தீச்சட்டி ஏந்தி வீதி உலா வருதல் நடந்தது. 3-வது நாள் மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 12 மணிக்கு வான வேடிக்கை கரகாட்டத்துடன், யானை முன் செல்ல அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல், மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 12 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூக்குழி இறங்குதல நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்