சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலய திருவிழா கொடியேற்றம்
சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வட்டார முதன்மை குரு ஜோசப் ரவிபாலன், உதவி பங்குத் தந்தை மரிய ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் தட்டார்மடம் பங்குத் தந்தை ததேயுஸ்ராஜன் கொடியேற்றினார். பங்குத்தந்தை ஜோசப் கலைச்செல்வன் மறையுரை வழங்கினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். 10-ந் தேதி புனித மாசற்ற இருதய அன்னையின் அற்புத தேர்ப்பவனி நடக்கிறது. இரவில் நற்கருணைப் பவனி நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.