சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில்தொழில் நிர்வாகதுறை கருத்தரங்கம்
சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் தொழில் நிர்வாகதுறை கருத்தரங்கம் நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொழில் நிர்வாகவியல் துறையில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. 2-ம்ஆண்டு மாணவி நிலோபர் ஆரோக்கிய ரேஷ்மா வரவேற்றார். கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை தாங்கினார். துறைத் தலைவி பேராசிரியை அமுதவாணி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் ஆட்லின் ஜெய சந்திரிகா கலந்து கொண்டு, பெண்கள் உரிமைகள் என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியை பேராசிரியைகள் சண்முகசுந்தரி, கோகிலா ஆகியோர் தொகுத்து வழங்கினர். மூன்றாம் ஆண்டு மாணவி சவுமியா ஆனந்தி நன்றி கூறினார். கருத்தரங்கில் தொழில் நிர்வாகவியல் பேராசிரியைகள், மாணவிகள் பிற துறைப் பேராசிரியர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தொழில் நிர்வாகவியல்துறை பேராசிரியை மீனா செய்திருந்தார்.