சாத்தான்குளம் பகுதி கடைகளில் தொழிலாளர் துறையினர் திடீர் ஆய்வு
சாத்தான்குளம் பகுதி கடைகளில் தொழிலாளர் துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் பகுதியில் உள்ள கடை மற்றும் நிறுவனங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து நேற்று தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பாலசுப்ரமணியன், சங்கர கோமதி மற்றும் தேசிய குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு அலுவலர், ஆள் கடத்தல் பிரிவு காவலர், சைல்ட் ஹெல்ப் லைன் இணைந்து சாத்தான்குளம் பகுதியில் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஜவுளி, பேக்கரி, மளிகை கடைகள் மற்றும் நிறுவனங்களில் இந்த ேசாதனை நடத்தப்பட்டது. சட்ட விரோதமாக குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினார் அந்நிறுவனத்தினருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.